யாருப்பா இவரு? 19 வயதில் அறிமுக போட்டியில் தூள் கிளப்பிய சுயாஷ் சர்மா
நேற்று நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடருக்கான 9வது லீக் போட்டியில், தனது 19 வயதில் தூள் கிளப்பிய கொல்கத்தா வீரர் சுயாஷ் சர்மா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி
நேற்று 16வது ஐபிஎல் தொடருக்கான 9வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பெங்களூரு அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் கொல்கத்தா அணி துப்பாட்டம் செய்தது. இதில் வீரர் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனையடுத்து, துப்பாட்டம் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் கொல்கத்தா அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா அணி, ஆர்சிபியை வீழ்த்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக போட்டியில் தூள் கிளப்பிய சுயாஷ் சர்மா
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கேகேஆர் அணிக்காக விளையாடி அசத்திய சுயாஷ் சர்மா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
இப்போட்டி தான் சுயாஷ் சர்மாவின் அறிமுகப் போட்டி. இவர் இதுவரை எந்த ஒரு பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்த வீரர் திடீரென்று நேற்று கேகேஆர் அணி இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். முடியை தோனி போல் நீளமாக வைத்திருக்கும் சுயாஷ் ஷர்மாவுக்கு 19 வயதுதான். லெக் பிரேக் பந்து வகை வீசும் இவர் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் வரிசையை திணறடித்திருக்கிறார்.
4 ஓவர்களை வீசிய சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுயாஷ் ஷர்மாவின் பந்து வீசும் விதம் வித்தியாசமாக இருப்பதாகவும், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. இவருடைய பந்து வீச்சில் ஆர்சிபி அணி வீரர்கள் திணறியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
You saw Suyash Sharma in IPL today. Now watch his magic before he showed it to us in IPL ?pic.twitter.com/ebinZ29FwN
— CricWatcher (@CricWatcher11) April 6, 2023
What a Debut for Suyash Sharma?
— KKR Bhakt ?? ™ (@KKRSince2011) April 6, 2023
3 fer already ? pic.twitter.com/oDaJb7rIde
A debut to remember for 19-year-old Suyash Sharma.
— Johns. (@CricCrazyJohns) April 6, 2023
He is yet to play a professional game before this IPL & he took 3 for 30 from 4 overs. pic.twitter.com/KQex55bUvE
Impact player putting a real impact!
— OneCricket (@OneCricketApp) April 6, 2023
Big moment for Suyash Sharma ?#KKRvRCB #SuyashSharma #AmiKKR #RCBpic.twitter.com/D20FeJMCFM