100 கோடி பட்ஜெட்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த 19 வயது இளைஞர்!
KGF CHAPTER 2 படத்தின் படத்தொகுப்பாளராக சிறப்பாக பணியாற்றிய 19 வயது இளைஞர் உஜ்வால் குல்கர்னிக்கு இந்தியா முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான KGF CHAPTER 1 என்ற கன்னட திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்று கன்னட சினிமாவை இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க செய்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகமான KGF CHAPTER 2 கடந்த 14ஆம் திகதி உலக முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
படத்தை பார்த்த அனைவரும் வியந்து போய் கொண்டாடி வருகின்றனர். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருப்பது 19 வயது இளைஞர். படத்தை பார்த்தவர்கள் இதனை அறிந்து வியந்து போயுள்ளனர்.
100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு திரைத்துறையில் முன் அனுபவம் இல்லாத உஜ்வால் குல்கர்னி என்ற இளைஞர் பணியாற்றி இருப்பதுடன், மிகவும் நேர்த்தியாக பார்வையாளரை மிரள வைக்கும் வகையில் அவர் எடிட் செய்துள்ளது தான் இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது.

உஜ்வால் குல்கர்னி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பாணியில் KGF படத்தின் பாடலுக்கு எடிட் செய்து வீடியோ பதிவிட்டிருந்தார்.
அவரது பணி இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு பிடித்து போக, அவரை அழைத்து KGF CHAPTER 2 படத்திற்கான ட்ரைலர் கட் வாய்ப்பை கொடுத்தார். அதை பிரமாதமாக உஜ்வால் செய்து விடவே, 100 கோடி செலவில் உருவான மொத்த படத்திற்கான படத்தொகுப்பு பணியையுமே கொடுத்துவிட்டார்.
முன்-பின் கதைகள், கிளைக்கதைகள் என மிகவும் சவால் நிறைந்த கதையில் தனது சிறப்பான உழைப்பின் மூலம் சாதித்து காட்டியுள்ளார். அவருக்கு தற்போது பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
19 வயதில் உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு படத்தின் முக்கிய பணியான படத்தொகுப்பை ஒருவர் சிறப்பாக செய்துள்ளது திரைத்துறை வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        