15 கல்லூரிகளில் நிராகரிப்பு; தனது ஸ்டார்ட்அப்பிற்கு ரூ.95 கோடி நிதி திரட்டிய 19 வயது இளைஞர்
19 year old raises 95 cr for his startup after 15 college rejected him: 15 கல்லூரிகளில் நிராகரிக்கப்பட்ட இளைஞர், தனது ஸ்டார்ட்அப்பிற்காக 19 வயதில் ரூ.95 கோடி நிதி திரட்டியுள்ளார்.
15 கல்லூரிகளில் நிராகரிப்பு
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த Zach Yadegari தனது 7 வயதிலே கணிணி நிரலாக்கத்தை கற்க தொடங்கியுள்ளார். மேலும், தனது பள்ளியின் ரோபோடிக்ஸ் குழுவின் தலைவராக இருந்துள்ளார்.

அதன் மூலம், தனது பள்ளிப்பருவத்தில், பள்ளி நெட்வொர்க்குகளில் தடுக்கப்பட்டிருந்த விளையாட்டுகளை மாணவர்கள் அணுக அனுமதிக்கும் 'Totally science' என்ற விளையாட்டு இணையதளத்தை உருவாக்கினார்.
தனது 16வது வயதிலே, அந்த இணையதளத்தை சுமார் 1,00,000 டொலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 95 லட்சம்) விற்பனை செய்துள்ளார்.
4.0 GPA, 34 ACT மதிப்பெண் மற்றும் ஒரு நிறுவப்பட்ட வணிக நிறுவனம் வைத்திருந்தாலும் அவர் விண்ணப்பித்த ஹார்வர்ட், யேல் மற்றும் ஸ்டான்போர்ட் உள்ளிட்ட 18 கல்லூரிகளில் 15 கல்லூரிகள் அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளன.

இறுதியில், அவர் மியாமி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
19 வயதில் ஸ்டார்ட்அப்பிற்கு ரூ.95 கோடி நிதி திரட்டல்
அதைத்தொடர்ந்து, பயனர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் தங்கள் உணவில் உள்ள கலோரி அளவைக் கணக்கிட அனுமதிக்க்கும் Cal AI என்ற செயலியை உருவாக்கினார்.
அந்தச் செயலி 2 ஆண்டுகளுக்குள் 15 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்து, ஆண்டு வருமானமாக 30 மில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 286 கோடி) மேல் ஈட்டியிருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில், மைஃபிட்னஸ்பால் நிறுவனம், கால் ஏஐ செயலியை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்தியதாக அறிவித்தது.
தற்போது, பயனர்கள் அன்றாடச் செயல்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெர்சோனா என்ற AI உதவியாளரை யாதேகரி உருவாக்கத் தொடங்கினார்.
சமீபத்தில், வைன் வென்ச்சர்ஸ் தலைமை தாங்கிய நிதி திரட்டல் சுற்றில், பெர்சோனாவிற்காக 10 மில்லியன் டொலர்களைத் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 கோடி) திரட்டியுள்ளார் 19 வயது தொழில் முனைவோரான Zach Yadegari.