CSK அணியில் இணையவுள்ள 19 வயது விக்கெட் கீப்பர் - யார் இந்த கார்த்திக் சர்மா?
CSK அணியில் 19 வயது விக்கெட் கீப்பர் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடர்களில் 5 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வென்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிரடியாக விளையாட கூடிய வீரர்களை சென்னை அணி வாங்காததாலே தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இதனால், எதிர்கால அணியை கட்டமைக்கும் முயற்சியில் சென்னை அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. இதன்படி, இளம் வீரர்களை அணியில் இணைத்து வருகிறது.
தோனிக்கு, இதுவே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே எதிர்கால அணித்தலைவர் ருதுராஜ் வழிநடத்துவதற்கு ஏற்ற, இளம் வீரர்கள் கொண்ட சென்னை அணியை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய போட்டிகளில், ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை, அணியில் இணைத்து வாய்ப்பு வழங்கியுள்ளது.
கார்த்திக் சர்மா
மேலும், தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் ஒருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது வீரரான கார்த்திக் சர்மாவை, சோதனைக்காக சென்னை அணி நிர்வாகம் அழைத்துள்ளது.
அடுத்த போட்டிக்குள் அணியில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியும் சோதனைக்காக அழைத்த போது, சிக்ஸர் அடித்து அசத்தினார் கார்த்திக் சர்மா.
ரஞ்சி கோப்பையில், அறிமுகப் போட்டியிலேயே 115 பந்துகளில் 113 ஓட்டங்களை எடுத்து கவனத்தை ஈர்த்த கார்த்திக் சர்மா, சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் 26 சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |