பிரித்தானியாவில் அத்துமீறி நுழைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கிரிமினல் சட்டங்கள் பாயும் என எச்சரிக்கை!
ஆங்கில கால்வாயில் இருந்து பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழைவதற்காக கடந்த வியாழன்கிழமை மிக சிறிய படகில் கிட்டத்தட்ட 190நபர்கள் முயன்று இருப்பதாக பிரித்தானியாவின் உள்விவகார துறை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆங்கில கால்வாய் வழியாக மிக சிறிய ஆறு படகில் பிரித்தானியாவின் கென்ட் நகருக்கு சுமார் 190 பேர் அடங்கிய புலம்பெயர்ந்த குழு வந்துசேர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் நிலவும் இதமான வெப்பநிலை மற்றும் அமைதிக்கான கடல் ஆகிய சாதகமான பருவநிலை நீடிப்பதால் கடந்த செய்வாய்க்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 400 நபர்கள் வரை பிரித்தானியாவுக்கு வந்து இருப்பதாகவும், அதில் சில குழந்தைகளுக்கும் இருந்ததாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இதமான வெப்பநிலை காரணமாக இந்த மாதத்தில்(மார்ச்) மட்டும் 2,500 நபர்கள் வரை மிக சிறிய படகில் பிரித்தனியாவிற்கு வந்து சேர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது, இது கடந்த அண்டை மார்ச் மாதத்துடன்(831) ஒப்பிடுகையில் பிரித்தானியாவிற்கு வருகை தரும் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பிரித்தானியாவின் சட்டவிரோத குடியேற்றத்தை கையாள்வதற்கான அமைச்சர் டாம் பர்ஸ்க்ளோவ் (Tom Pursglove) ஆங்கில கால்வாய் வாயிலாக மிக ஆபத்தான முறையில் பிரித்தானியாவுக்கு நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய குடியேற்றங்கள், பிரித்தானியாவின் குடிவரவு சட்டங்களை அவமதிப்பதுடன், பிரித்தானியாவில் வரி செலுத்தும் நபர்களின் சுமையையும் அதிகரிக்கிறது. மற்றும் முறையாக சட்டப்படி பிரித்தானியாவிற்குள் குடியேறும் புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவியையும் இது சிக்கல் ஆக்குகிறது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பர்ஸ்க்ளோவ், பிரித்தானியாவில் கடத்தல் போன்ற குற்றங்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு சட்டம், பிரித்தானியாவிற்குள் அத்துமீறி நுழையும் புலம்பெயர்ந்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.