60 வருடங்களுக்கு முந்தைய ரோலக்ஸ் வாட்ச்: 41 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்த பிரித்தானியர்
60 வருடங்களுக்கு முந்தைய 7000 ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பிரித்தானியாவில் தற்போது 41 லட்சத்திற்கு ஏலத்தில் விலை போகியுள்ளது.
41 லட்சத்திற்கு ஏலம் போன ரோலக்ஸ் வாட்ச்
1964ம் ஆண்டு வாங்கப்பட்ட 7000 ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பிரித்தானியாவில் நடைபெற்ற ஏலத்தில் 41,11,692 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
இந்த ரோலக்ஸ் வாட்ச் பிரித்தானிய ராயல் கடற்படையின் மீட்பு ஹெலிகாப்டரில் நீர் மூழ்குபவராக பணிபுரிந்த சைமன் பார்னெட்(Simon Barnett) என்ற நபருக்கு சொந்தமானது.
SWNS/BNPS
1953ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நீர்மூழ்கி மாடல் ரோலக்ஸ் வாட்ச் முதல் “டைவர்ஸ் வாட்ச்” ஆகும், அத்துடன் இவை 100 மீட்டர்(330 அடி) ஆழத்திற்கு நீர் காக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்திற்கு வந்த டைவர்ஸ் வாட்ச்
2019 ஆம் ஆண்டு சைமன் பார்னெட்(Simon Barnett) உயிரிழந்த நிலையில், அவரது மகன் பீட் பார்னெட்(Pete Barnett) தன்னுடைய பகுதியான நோர்போக்கில்(Norfolk) நடைபெற்ற ஏலத்தில் டைவர்ஸ் வாட்சை விற்பனை செய்துள்ளார்.
SWNS
முன்னதாக பிபிசி நடத்திய பழங்கால சாலை கண்காட்சியில் சைமன் பார்னெட்-டின் டைவர்ஸ் வாட்ச் அவரது மகனால் காட்சிக்கு வைக்கப்பட்டது.
அப்போது ஏல நிறுவனம் TW Gaze-ஆல் 30,000 பவுண்ட் முதல் 45,000 பவுண்டுகளுக்கு மதிப்பிடப்பட்டது.
வாட்ச் தொடர்பாக பீட் “தீ மெட்ரோ” விடம் வழங்கிய தகவலில், இந்த கடிகாரத்தை எப்போதும் அணி இருந்ததாகவும், இதன் மூலம் அவரது தந்தையுடன் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார், ஆனால் அதன் உண்மையான மதிப்பு தெரிந்த போது, 60,000 பவுண்டுகளை கையில் கட்டிக் கொண்டு எல்லா இடத்திற்கும் சுற்றித் திரிய மனம் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
TW Gaze Auction/BNPS