நகை, பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் - யூடியூபர் வீட்டில் 1 கோடி மதிப்பில் கொள்ளை
1cr worth gold money theft on youtuber madhumitha house: நகை, பணக்கட்டுகளுடன் ரீல்ஸ் வெளியிட்ட யூடியூபர் வீட்டில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நகை, பணக்கட்டுகளுடன் ரீல்ஸ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியில் விஐபி கார்டனில், யூடியூபர் மதுமிதா தனது கணவர் வினோத்குமார் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
யூடியூபர் மதுமிதா கழுத்து நிறையாக தங்க நகைகளை அணிந்து, பணக்கட்டுகளை காண்பித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். மேலும், எங்கே எப்போது செல்வோம் என்பதை கூட தனது வீடியோக்களில் தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், நேற்று மாலை ஷாப்பிங் செய்வதற்காக வெளியே சென்று விட்டு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
யூடியூபர் வீட்டில் 1 கோடி மதிப்பில் கொள்ளை
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, 118 சவரன் தங்கம், வைரம், ரொக்கம் உட்பட ரூ.1 கோடி மதிப்பில் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் கிடைத்த கைரேகை பதிவுகளைச் சேகரித்துள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.