யார் அந்த அதிர்ஷ்டசாலி? ஒரு மில்லியன் வென்றவரைத் தேடும் லொட்டரி நிறுவனம்
பிரித்தானியாவில், ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலியை வலைவீசித் தேடிவருகிறது லொட்டரி நிறுவனம் ஒன்று.
யார் அந்த அதிர்ஷ்டசாலி?
இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஒருவர் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
ஆனால், அவர் இதுவரை அந்த பரிசை பெற்றுக்கொள்ள வரவில்லை.
ஆகவே, அந்த நபரை லொட்டரி நிறுவனம் தேடிவருகிறது. விடயம் என்னவென்றால், லொட்டரி குலுக்கல் நடைபெற்ற 180 நாட்களுக்குள் பரிசு பெற்றவர்கள் தங்கள் பரிசை பெற்றுக்கொள்ளவேண்டும்.
அப்படிப் பார்த்தால், அந்த நபர் அடுத்த மாதம், அதாவது, நவம்பர் 20ஆம் திகதிக்குள் தனது பரிசை சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 40,61,90,800.00 ரூபாய் ஆகும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |