சுவிட்சர்லாந்தில் புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளே நிகழ்ந்த துயரம்
சுவிட்சர்லாந்துக்கு புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளே, மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் பரபரப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, தன் முதல் உரையை ஆற்ற இயலாத நிலை ஜனாதிபதிக்கு உருவானது.
புதிய ஜனாதிபதி பதவியேற்ற முதல் நாளே நிகழ்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.

விடயம் என்னவென்றால், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கய் பார்மலின் (Guy Parmelin), தனது பாரம்பரிய புத்தாண்டு உரையை ஆற்றவேண்டியிருந்தது.

ஆனால், அந்த தீவிபத்து நாட்டில் ஏற்படுத்திய துயரத்தால் தனது புத்தாண்டு உரையையே ரத்து செய்துவிட்டார் பார்மலின். அத்துடன், ஐந்து நாட்களுக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அவர் உத்தரவிடவேண்டியதாகிவிட்டது.
இது சுவிஸ் வரலாற்றில் நாட்டை பாதித்த மோசமான பேரிடர் என்று கூறியுள்ள அவர், அது, சுவிஸ் மருத்துவ அமைப்பையே கடும் அழுத்தத்திற்குள்ளாக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், நாட்டிலேயே தீவிபத்து சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனைகள் இரண்டுதான் உள்ளன. ஆகவே, காயமடைந்த சிலரை அருகிலுள்ள இத்தாலி நாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |