சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் முதன்முறையாக கொசுக்கள் உடலில் டெங்கு வைரஸ் கண்டுபிடிப்பு
அறிவியலாளர்கள் வடக்கு ஆல்ப்ஸ் பகுதியில், முதன்முறையாக கொசுக்களின் உடலில் டெங்கு வைரஸ் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
முதன்முறையாக...
Basel மாகாண மருத்துவமனையின் அறிவியலாளர்கள், ஆல்ப்ஸ் மலையின் வடக்குப் பகுதியில் முதன்முறையாக, Asian tiger mosquito என்னும் கொசுக்களின் உடலில் டெங்கு நோயைப் பரப்பும் வைரஸ்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதாவது, டெங்கு பரவலுக்கு அதிக வெப்பம் தேவை. சுவிட்சர்லாந்தில் அந்த அளவுக்கு வெப்பநிலை உயர்வதில்லை.
ஆக, அப்படிப்பட்ட ஒரு குளிரான இடத்தில் இப்படி டெங்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஒரு அரிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்திலும் டெங்கு பரவும் அபாயம் உள்ளது என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவே என்கிறது சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம்.
அதாவது, யாராவது டெங்கு பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணி ஒருவரைக் கடிக்கும் கொசுக்கள், அவரிடமிருந்து டெங்கு வைரஸை பரப்பினால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |