ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் பாதுகாக்காது! பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் ஒரு டோஸ் மட்டும் இந்திய மாறுபாடு தொற்றிலிருந்து பாதுகாக்காது என NERVTAG நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வாரம் இங்கிலாந்து பொது சுகாதாரம் வெளியிட்ட அறிக்கையில், AstraZeneca மற்றும் Pfizer தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் இந்திய மாறுபாட்டை தடுத்து தொற்றால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் என அறிவித்தது.
ஆனால், ஒரு டோஸ் மட்டும் போட்டிருந்தால், அது இந்திய மாறுபாடு தொற்றிலிருந்து பாதுகாக்காது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அரசாங்கத்தின் புதிய மற்றும் அதிகரித்து வரும் வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழு (NERVTAG) உறுப்பினர் ரவி குப்தா வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை, குறிப்பாக வெளியே சென்று மக்களோடு மக்களாக கலக்கவுள்ள இளம் வயதினர்.
வைரஸ் அதிகரித்து வருகிறது, எனவே நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனென்றால் மிக விரைவாக இது கட்டுப்பாட்டை மீறக்கூடும் என ரவி குப்தா எச்சரித்துள்ளார்.