அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக துடுப்பாடியதால், அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து இந்தியா, 109 ஓட்டங்கள் இலக்கை துாக்கி, 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா (12 பந்துகளில் 24 ஓட்டங்கள்), ஹூடா (29 பந்துகளில் 47 ஓட்டங்கள்), இஷான் கிஷன் (26 ஓட்டங்கள்) சீராக விளையாட, 108 ஓட்டங்கள் இலக்கை 16 பந்துகள் மீதமிருக்க துரத்தி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினர்.
PC: ICC Twitter
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணியின் அனைத்து வீரர்களின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் கடும் ஏமாற்றம் அளித்தார்.
அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான சூர்யகுமார் இந்தப் போட்டியில் வந்து அவுட் ஆன முதல் பந்திலேயே திரும்பிச் சென்றார்.
PC: ICC Twitter
முன்னதாக, இந்தியா மேகமூட்டமான சூழ்நிலையில் பந்து வீசத் தேர்ந்தெடுத்தது, ஆனால் மழை வந்தவுடன், ஆட்டம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. இடைவேளைக்கு பிறகு ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது.
போட்டியின் தாமதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், இந்திய ரசிகர்கள் தங்கள் காத்திருப்புக்கான பலனை அடைந்தனர்.
அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
PC: ICC Twitter