கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை - ஒரு தொடரில் 2 வீரர்கள் ஹாட்ரிக்
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான T20 தொடரில், கிரிக்கெட்டில் இதுவரை நடைபெறாத சாதனை நிகழ்ந்துள்ளது.
தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே 3 T20 போட்டிகள் கொண்ட தொடர் துபாயில் நடைபெற்றது.

இதில் முதல் 2 T 20 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, 2- 0 என்ற கணக்கில் T20 தொடரை கைப்பற்றியிருந்தது.

நேற்று நடைபெற்ற 3வது T20போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த T20 தொடரில், கிரிக்கெட்டில் இதுவரை நடைபெறாத சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.
2 ஹாட்ரிக்
நேற்று நடைபெற்ற 3வது T20போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ஷாமர் ஸ்ப்ரிங்கர்(Shamar Springer), 19வது ஓவரில் தனது முதல் ஹாட்ரிக்கை வீழ்த்தினார்.

Credit : AFP
ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோருக்கு அடுத்ததாக ஹாட்ரிக் எடுத்த 3வது மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் என்ற பெருமையை ஷாமர் ஸ்ப்ரிங்கர் பெற்றுள்ளார்.
இதே போல், 2வது T20 போட்டியில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான்(Mujeeb Ur Rahman) ஹாட்ரிக் வீழ்த்தினார்.

ரஷீத் கான் மற்றும் கரீம் ஜனத் அடுத்ததாக T20 ஹாட்ரிக் எடுத்த 3வது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.
மேலும் 82 விக்கெட்களுடன், டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரராக முஜீப் உர் ரஹ்மான் உள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஆண்கள் T20 தொடரில் 2 வீரர்கள் ஹாட்ரிக் எடுத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |