முதல் ஓவரிலே ஓட்டங்கள் எடுக்காமல் 3 டக் அவுட் - மோசமான சாதனை படைத்த இந்தியா
1st time in history india lost 3 wicket without runs: நியூசிலாந்திற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், முதல் ஓவரிலே இந்திய அணி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட்களை இழந்துள்ளது.
333 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து
நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள மவுண்ட் மாங்கனேயில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 333 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான Will Young 125 ஒட்டங்கள் குவித்து சதம் விளாச, Tim Seifert 58 ஓட்டங்கள் குவித்து அரைசதம் விளாசினர்.

334 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலே 3 விக்கெட்களை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
முதல் ஓவரிலே 3 விக்கெட் இழந்த இந்தியா
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மாட் ஹன்றி வீசிய முதல் பந்திலே பின் ஆலனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 5வது பந்தில் விராட் கோலி bowled முறையிலும், 6வது பந்தில் ஷ்ரேயஸ் ஐயர் LBW முறையிலும் 3 பேரும் டக் அவுட் ஆக இந்திய அணி ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து, 5வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது விக்கெட் இழப்பை தவிர்க்க நிதானமாக ஆடி வரும் இஷான் கிஷன் 46 பந்துகளில் 25 ஓட்டங்களும், அக்சர் படேல் 30 பந்துகளில் 19 ஓட்டங்களும் குவித்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மோசமான சாதனை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் தங்களது முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது இதுவே முதல் முறையாகும்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு, 2010 ஆம் ஆண்டில் தம்புள்ளாவில் இலங்கைக்கு எதிரான முத்தரப்புத் தொடரில் இது நிகழ்ந்தது.
ஒருநாள் போட்டியின் அணித்தலைவராக அறிமுகப் போட்டியில் டக் அவுட் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயஸ் ஐயர்பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா 12 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த அதே நாளில் டக் அவுட் ஆகியுள்ளார்.