சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக வெடித்துள்ள புலம்பெயர்தல் கலவரம்: பின்னணி
ஒரு காலத்தில், உலகின் மிக அமைதியான நாடுகளில் ஒன்று என கருதப்பட்ட சுவிட்சர்லாந்திலும் புலம்பெயர்தல் கலவரங்கள் வெடித்துள்ளன.
சுவிட்சர்லாந்தின் முதல் புலம்பெயர்தல் கலவரம்
புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என கருதப்படும் 17 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் துரத்தும்போது அவர் உயிரிழந்ததையடுத்து இந்தக் கலவரங்கள் வெடித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள லோசான் நகரில் திருடப்பட்ட ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு புலம்பெயர் இளைஞர் பயணிப்பதாகக் கூறி, அவரை பொலிசார் துரத்தியுள்ளார்கள்.
வேகமாகச் சென்ற அவரது ஸ்கூட்டர் வேகத்தடை ஒன்றின் மீது ஏறும்போது, நிலைதடுமாறி சுவர் ஒன்றில் சென்று மோதியுள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த விடயம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து புலம்பெயர் சமுதாயத்தினருக்கும் லோசான் நகர அதிகாரிகளுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
இந்த கலவரம் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில், இது சுவிட்சர்லாந்தின் முதல் புலம்பெயர்தல் கலவரம் என சில ஊடகங்கள் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |