முதல்முறையாக நியூசிலாந்தை உலக கிண்ணத்தில் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி
இலங்கை மகளிர் அணி, முதல்முறையாக நியூசிலாந்தை உலக கிண்ணத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை மகளிர் அணி வெற்றி
2026 மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்து மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக, அணித்தலைவி அமெலியா கெர் மற்றும் சோஃபி டிவைன் தலா 45 ஓட்டங்கள் குவித்தனர்.

151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை மகளிர் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் நிலக்சி டி சில்வா 54 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

முன்னதாக உலக கிண்ணத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை மோதியுள்ள நிலையில், ஒரு முறை கூட இலங்கை அணி வெற்றி பெற்றதில்லை.

இந்த போட்டியில், முதல்முறையாக நடப்பு சாம்பியனாக உள்ள நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளுடன் தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டியிலும் தோற்று, பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 5வது இடத்தில் உள்ளது. இதனால், அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |