இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட முதல் நபர்! அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு தடை? முக்கிய முடிவை எடுத்த பிரபல நாடு
அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் சில நாட்களுக்கு முன்பு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 44 வயதான ஒரு நபர், அந்நாட்டில் முதல் முறையாக இரத்த உறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையன்று Melbourne மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை அந்நாட்டில் தடைசெய்யப்படலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்நாட்டின் மிக முக்கிய மருத்துவ குழுக்களாக Therapeutic Goods Administration அல்லது Australian Technical Advisory Group on Immunisation ஆகிய குழுக்களுடன் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சந்தித்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்த கூடுதல் ஆலோசனைகளைப் பற்றி விவாதித்ததாக அவுஸ்திரேலியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி Michael Kidd கூறினார்.
அவர் கூறுகையில், அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை இடைநிறுத்துமாறு ATAGI அல்லது TGA ஆகிய இரண்டு குழுக்களும் இந்த நேரத்தில் அறிவுறுத்தவில்லை என்றும், அதனால் தொடர்ந்து தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் Kidd தெரிவித்துள்ளார்.
44 வயதான நபர் இரத்த உறைவால் பாதிக்கப்பட்டதற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம், அனால் கடுமையான பக்கவிளைவுகளின் அபாயங்கள் மிகக் குறைவாகவே உள்ளன என்று கூறினார்.
அதே சமயம், மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால் தடுப்பூசியை தடை செய்வது நல்ல முடிவாக இருக்காது என அவர் கூறினார்.
மேலும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் இரத்த உறைவு பிரச்சினைகள் ஏற்படுவது குறித்து பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.