உக்ரைன் வந்திறங்கியது பிரித்தானியா முன்னாள் ராணுவ வீரர்கள் குழு! வெளியான வீடியோ
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பை தடுக்க பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் குழு வந்திறங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள தன்னார்வலர்கள் தங்கள் நாட்டிற்கு வந்து எதிரிகளை எதிர்கொள்ளுமாறு அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ரஷ்யா படையெடுப்பை தடுக்க பிரித்தானியாவிலிருந்து முதல் தன்னார்வ குழு உக்ரைன் வந்திறங்கியுள்ளது.
பிரித்தானியா தன்னார்வ குழுவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கூறியதாவது, என்னுடைய பெயர் Jax, நான் இங்கிலாந்திலிருந்து வந்துள்ளேன், உக்ரைன் மீதான படையெடுப்பை தடுக்க உதவுவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
கண்ப்பாக இதில் நாங்கள் வெற்றிபெறுவோம் என நம்புகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் நாங்கள் திறம்பட பயிற்சி பெற்றவர்கள்.
உக்ரைனில் இடம்பெறும் போர் குற்றங்களை தடுத்து நிறுத்துவதே எங்களின் குறிக்கோள்.
பொதுமக்கள் குறிவைத்து குண்டு வீசுவது, பொதுமக்களை கொல்வது மற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்வது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது, அதை நிறுத்த வேண்டும் என Jax தெரிவித்துள்ளார்.