மோத நீங்க எப்படி பேட்டிங் செய்திருக்கேங்க பாருங்க! இங்கிலாந்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மைதானத்தை இங்கிலாந்தை வீரர்கள் சிலர் குறை கூறி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நான்கு புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டே நாளில் போட்டி முடிந்துவிட்டதால், முன்னாள் வீரர்கள் பலரும், மைதானம் தான் இதற்கு காரணம் என்று குறை சொல்ல ஆரம்பித்தனர்.
ஆனால், சமூகவலைத்தளங்களில் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் ஆடிய நான்கு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Still can't believe there is so much debate about the Motera pitch. Technical flaws and weak minds led to poor batting. These 4 pics sum up the poor techinques. #INDvENG #MoteraCricketStadium pic.twitter.com/XCzaNP0IeE
— Gav Joshi (@Gampa_cricket) February 26, 2021
அதில், இங்கிலாந்து வீரர்கள் எப்படி பந்தை மிஸ் செய்கிறார்கள். நேராக வரும் பந்தை கணிக்காமல் எப்படி மிஸ் செய்கிறார்கள் என்று காட்டப்பட்டுள்ளது.
காலுக்கும் பேட்டிற்கும் இடையில் எவ்வளவு இடைவெளி விடுகிறார்கள் என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பிட்ச் என்பதை விட பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம்தான் காரணம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.