திருமண வரதட்சணையாக கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்த பெண் வீட்டார்
திருமணத்தில் வரதட்சணையாக கோடிக்கணக்கான பணத்தை ரொக்கமாக கொடுக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வரதட்சணை
இந்தியாவில் வரதட்சணை வாங்குவது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் வரதட்சணை வாங்கப்பட்டு வருகிறது.
வறுமையில் இருப்பவர்கள் முதல் பணக்காரர்கள் வரை தங்களால் முடிந்த பணத்தை வரதட்சணையாக கொடுக்கின்றனர்.
அந்தவகையில், இந்திய மாநிலமான டெல்லி டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற திருமணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த திருமணத்தில் வரதட்சணையாக ரூ.2.5 கோடி பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சூட்கேசில் வைத்து ரூ.2.56 கோடி ரொக்கப்பணத்தை கொடுத்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், சம்பிரதாய சடங்கிற்காக ரூ.11 லட்சமும் மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு என ரூ.8 லட்சமும் கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |