15 வயது பிரித்தானிய சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆப்கான் இளைஞர்களுக்கு சிறைத் தண்டனை
பிரித்தானியாவில் சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 2 ஆப்கான் இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்
பிரித்தானியாவின் லீமிங்டன் நகரின்(Leamington) மையப்பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு ஆப்கானிஸ்தான் சிறுவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் படி, 15 வயது சிறுமியை அவரது நண்பர்களிடம் இருந்து பிரித்து அருகில் இருந்த பூங்காவின் குகை போன்ற இடத்திற்கு கடத்தி சென்று இரண்டு 17 வயது ஆப்கான் சிறுவர்கள் சிறுமியை தரையில் தள்ளி பாலியல் துஷ்பிரயோகம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

விசாரணையின் இறுதியில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை இரண்டு சிறுவர்களும் ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைத் தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
விதிக்கப்பட்ட தண்டனை
குற்றவாளிகளில் ஒருவரான ஜான் ஜஹான்செப் என்பவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் இளைஞர் சீர்திருத்த பள்ளியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு முன்பே நாடு கடத்தல் தொடர்பான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நபரான இஸ்ரார் நியாஸல் என்பவருக்கு 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை நிறைவடைந்ததும் இருவரும் நாடு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |