பிரித்தானிய கடற்படை தளத்திற்குள் நுழைய முயற்சி: ஆண், பெண் என இருவர் கைது
ஸ்காட்லாந்து கடற்படை தளத்திற்குள் நுழைய முயன்ற இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய கடற்படை தளத்திற்குள் நுழைய முயற்சி
ஸ்காட்லாந்தின் பாஸ்லேன் கடற்படை தளமான HM Naval Base Clyde பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 19ம் திகதி வியாழக்கிழமை அணு ஆயுத தடுப்பு மையத்தில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 34 வயது ஆண் ஒருவரும், 31 வயது பெண்ணும் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, அத்துமீறிய சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலதிக தகவல்களை வழங்க பிரித்தானிய ராயல் கடற்படை மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |