பிரான்ஸ் காட்டுத்தீ... சதிவேலையா? இருவர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே அமைந்துள்ள காடு ஒன்றில் காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில், அது சதிவேலையாக இருக்கலாம் என்னும் கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பிரான்ஸ் காட்டுத்தீ...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, சுமார் 1,200 ஹெக்டேர் காட்டை கபளீகரம் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீ தொடர்ந்து பரவிவரும் நிலையில், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடுமையான வெப்பமும் காற்றும் தீயை அணைப்பதற்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், புதிதாக ஒரு இடத்திலும் தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீயைத் தொடர்ந்து, பாரீஸை தெற்கு பிரான்சுடன் இணைக்கும் நெடுஞ்சாலை, புகை காரணமாக மூடப்பட்டுள்ளது.
சதிவேலையா?
இதற்கிடையில், இந்த காட்டுத்தீ சதிவேலையாக இருக்கலாம் என்னும் கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில், சந்தேகத்துக்கிடமான இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |