வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி
Two Brit women killed in a four vehicle crash in Romania: ரொமேனியா நாட்டில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தொன்றில், இரண்டு பிரித்தானிய பெண்கள் உயிரிழந்துள்ளார்கள்.
பிரித்தானியாவிலிருந்து சென்ற மினி பேருந்தொன்றில், 10 நாய்களுடன் இரண்டு பிரித்தானிய பெண்கள் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அந்தப் பெண்கள் பயணித்த மினி பேருந்து, தவறான திசையில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை ஒன்றில் அந்த மினி பேருந்தும், இரண்டு ட்ரக்குகளும் ஒரு வேனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அந்த பயங்கர விபத்தில், மினி பேருந்தில் பயணித்த முறையே 61 மற்றும் 41 வயதுடைய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள்.
அத்துடன், அவர்களுடைய பேருந்திலிருந்த 10 நாய்களில் 8 நாய்களும் உயிரிழந்துள்ளன.

இந்த கோர விபத்து குறித்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.