Majorca திடீர் வெள்ளத்தில் சிக்கிய பிரித்தானிய தம்பதி: 2வது நபரின் உடல் மீட்பு
மாலோர்கா தீவில் பிரித்தானிய மலையேறிகளை கண்டறிய தொடங்கப்பட்ட தேடுதல் பணியில் இரண்டாவது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல்கள் மீட்பு
ஸ்பெயினின் மாலோர்கா(Majorca) தீவில் ஒரு பிரிட்டிஷ் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் இந்த வாரத்தின் துவக்கத்தில் ஒரு வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
புதன்கிழமை பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அந்த இடத்தை சுற்றி மீட்பு குழுக்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு இருப்பதாக ஸ்பானிய சிவில் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஜோடியின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
என்ன நடந்தது?
மாலோர்காவின் ட்ரமுண்டானா மலைகளில்( Tramuntana mountain) உள்ள டொரெண்ட் டி பாரெய்ஸ் பள்ளத்தாக்கில் (Torrent de Pareis canyon) இந்த ஜோடி நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, புயல் தாக்கியது, இது வெள்ளப்பெருக்கிற்கு வழிவகுத்தது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இந்த பிரித்தானிய தம்பதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |