எரிந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட 2 பிரித்தானியர்கள்: இரண்டு நாடுகளில் நடைபெறும் விசாரணை
இரண்டு பிரித்தானியர்களின் உயிரிழப்புடன் தொடர்புடைய நபரை ஸ்வீடன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கைது
கடந்த ஜூலை மாதம் ஸ்வீடன் நாட்டின் Malmö-வில் இரண்டு பிரித்தானியர்கள் எரிந்த கார் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை ஸ்வீடன் நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொலைக்கு உதவிகரமாக இருந்த சந்தேகத்தின் போரில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது வழக்கறிஞர்களால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
பிரித்தானியர்களுக்கு நேர்ந்த கொடுமை
வடக்கு லண்டனை சேர்ந்த 37 வயதான Farooq Abdulrazak மற்றும் 33 வயதான Juan Cifuentes என்ற இருவர் கடந்த ஜூலை 17ம் திகதி எரிந்த Toyota Rav 4 காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
வணிக பயணம் மேற்கொண்டு இருந்த இருவரும் வீட்டிற்கு திரும்பாததை தொடர்ந்து அவர்களை தேட தொடங்கிய போது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறிய இருந்தது தெரியவந்தது.
பொலிஸார் வழங்கிய முதல் கட்ட தகவலின் படி, அவர்கள் காரில் வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரின் தொடர்பாக ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் தொழில் பங்காளிகள் மற்றும் அவர்கள் வடக்கு லண்டனில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |