உக்ரைனில் காணாமல் போன தன்னார்வலர்கள்: 2 பிரித்தானியர்கள் பெயர்கள் வெளியீடு
உக்ரைனில் காணாமல் போனதாக கூறப்படும் இரண்டு பிரித்தானியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போன பிரித்தானியர்கள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் 11 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி இருந்தனர்.
அந்த வகையில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பொதுமக்கள் வெளியேற்றம் மற்றும் மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்த பிரித்தானியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ பாக்ஷா(Andrew Bagshaw) மற்றும் கிறிஸ்டோபர் பாரி(Christopher Parry) ஆகிய இருவர் காணாமல் போகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sky News
இந்த ஜோடி கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கிராமடோர்ஸ்கை(Kramatorsk) விட்டு வெளியேறிய சோலிடார்(Soledar) நகரத்திற்கு சென்ற போது பார்க்கப்பட்டனர், பின்னர் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மறுநாள் மாலை 5.15 மணியளவில் அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. டொனெட்ஸ்கில் உள்ள அதிகாரிகள் இருப்பிடத்தை நிறுவ விசாரணை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
FCDO செய்தித் தொடர்பாளர், "உக்ரைனில் காணாமல் போன இரண்டு பிரித்தானிய ஆண்களின் குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sky News
கிறிஸ்டோபர் பாரி
ரஷ்ய பீரங்கிகள் உக்ரேனிய நிலைகள் மீது குண்டு வீசித் தாக்கிய பயங்கரமான சூழ்நிலையில் கிறிஸ்டோபர் பாரி முன் வரிசைக்கு அருகே உள்ள மக்களை வெளியேற்றும் நேரத்தை பற்றி முன்பு ஸ்கை நியூஸிடம் பேசினார்.
ஸ்கை நியூஸிடம் அவர் உதவி செய்ய வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று தெரிவித்து இருந்தார்.