சிறையில் மலர்ந்த காதல்! ராஜஸ்தானில் 2 ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம்
ராஜஸ்தானில் இரண்டு ஆயுள் தண்டனை கைதிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் மலர்ந்த காதல்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் திறந்தவெளி சிறையில்(Open jail) கொடூரமான கொலை குற்றத்திற்காக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் பிரியா சேத் மற்றும் ஹனுமன் பிரசாத் என்ற இரண்டு கைதிகளும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக முன்பு தொடங்கிய இவர்களது காதல் கதை தற்போது திருமணத்தில் முடிய உள்ளது.

திருமணத்திற்காக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தற்போது இருவருக்கும் 15 நாட்கள் அவசரகால பரோல் வழங்கியுள்ளது.
இருவரும் அல்வார் மாவட்டத்தில் உள்ள பரோடமேவ் பகுதியில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
கொலை குற்றச்சாட்டு
நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ள இருவரும் கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை சிறையில் அனுபவித்து வருகின்றனர்.
முன்னாள் மாடலான பிரியா சேத் மீது 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர கொலை குற்றமும், ஹனுமன் பிரசாத் மீது 2017ம் ஆண்டு 5 பேரை கொன்ற மோசமான கொலை குற்றமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொலை குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கி இருப்பது பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் திறந்தவெளி சிறை விதிகளின்படி, கைதிகள் தங்களது சமூகத்துடன் இணைவதற்கும் மீண்டும் மறுவாழ்வு அமைத்து கொள்வதற்கும் சட்ட வாய்ப்புகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பரோலில் விடுவிக்கப்படும் இவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் சிறைக்கு திரும்பி ஆயுள் தண்டனையை கழிக்க வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |