2 கோடி தொண்டர்களின் உணர்வு தான் கூட்டணி முறிவு: எடப்பாடி சொல்வது என்ன?
2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கூட்டணி முறிவில் உறுதி
தமிழக மாவட்டம், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி பிரிந்தது.
2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. பாஜகவுடன் கூட்டணி முறிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார்.
திமுகவில் வாக்குறுதி நிறைவேற்றவில்லை
மேலும் பேசிய அவர், "வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக 10 சதவீதம் கூட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைய போகிறது எந்த பொறுத்திருந்து பாருங்கள். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி பிரச்சனை காரணமாகவே மத்திய அமைச்சர்களை சந்தித்தனர். இதில் எந்த அரசியலும் இல்லை.
I.N.D.I.A கூட்டணி என்பதே நாடகம் தான். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியாக செயல்படுகின்றனர்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |