தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனால், இன்று (ஜன.27) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், (ஜன.30) மற்றும் (பிப்.1) ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும், நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |