One in, one out திட்டத்தை செயல்படுத்த திணறும் பிரித்தானியா: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்ஸ் செல்லும் விமானங்கள்
பிரித்தானியாவும் பிரான்சும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
இந்த திட்டத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக, ஆகத்து மாதம் 6ஆம் திகதி, முதன்முறையாக புலம்பெயர்ந்தோர் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
திணறும் பிரித்தானியா
கைது செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோரை, திங்கட்கிழமை முதல் பிரான்சுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டிருந்தது.
Gary Stone
ஆனால், திங்கட்கிழமை, பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டார்கள்.
அதாவது, அவர்களை பிரான்சுக்கு அனுப்ப தடை கோரி மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதால் அவர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படவில்லை.
அப்படியே, செவ்வாய்க்கிழமையும் பிரான்சுக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. அதிலும் புலம்பெயர்ந்தோர் யாரும் இல்லை.
இந்நிலையில், நேற்றும் இரண்டு விமானங்கள் பிரான்சுக்கு புறப்பட்டுள்ளன. அவைகளிலும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புலம்பெயர்ந்தோர் யாரும் இல்லை.
The Sun
பிரான்சுக்கு அனுப்ப பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுக்கும் புலம்பெயர்ந்தோரின் சட்டத்தரணிகள், அவர்களை பிரான்சுக்கு அனுப்புவதிலிருந்து கடைசி நேரத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவதால், அவர்கள் யாரும் பிரான்சுக்கு அனுப்பப்படவில்லை.
ஆக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரை One in, one out திட்டத்தின்படி பிரான்சுக்குத் திருப்பி அனுப்ப முடியாமல், பிரித்தானிய உள்துறை அலுவலகம் திணறிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |