பிரான்சில் மக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய நபர்: இருவர் பலி
Car rams crowd at bus stop in France: பிரான்சிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றில் மக்கள் கூட்டத்துக்குள் ஒருவர் காரைக் கொண்டு மோதியுள்ளார்.
தென்மேற்கு பிரான்சிலுள்ள Caen நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது, ஒருவர் வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதியுள்ளார்.
இருவர் பலி
ரஷ்ய வம்சாவளியினரான அந்த நபருக்கும் அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அந்த 26 வயது நபர் தனது காரைக் கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதியுள்ளார்.
கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாக, சுமார் 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழக்க, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
மேலும், காயமடைந்தவர்களில் ஆறு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
காரைக்கொண்டு மக்கள் கூட்டத்தில் மோதிய நபர் தப்பி ஓடிய நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.
எதனால் அந்த நபர் காரைக் கொண்டு மக்கள் மீது மோதினார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |