ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: இருவர் பலி
ஜேர்மன் நகரமொன்றில் மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று புகுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின்மீது வேண்டுமென்றே காரை மோதும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டுமே, மார்ச் மாதம், செப்டம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்திலும் இதேபோல் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரை மோதும் மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், நேற்று, ஜேர்மனியின் சாக்ஸனி மாகாணத்திலுள்ள Leipzig நகரில் ஒருவர் மக்கள் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்தியுள்ளார்.
கார் மோதியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் காரை ஓட்டிய 33 வயதான ஜேர்மானியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |