சுவிஸ் மின் நிலையத்தில் வெடிவிபத்து: இருவர் பலி
Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இருவர்கள் பலியாகியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Piotta என்னும் கிராமத்தில், நீர் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
மின் நிலையத்தில் வெடிவிபத்து
நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென அந்த மின் நிலையத்தில் தீப்பற்றியுள்ளது.

இரண்டு பணியாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தீ வேகமாகப் பரவ, சிறிது நேரத்தில் ஏதோ வெடித்துச் சிதற, முழு கட்டிடமும் குலுங்கியுள்ளது.
கட்டிடம் பலத்த சேதமடைய, கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த இருவரும் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன். மற்றவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
இந்நிலையில், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |