ஜேர்மனியில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்
Two people have died after a small plane crashed onto Germany's A2 highway: ஜேர்மனியில், நெடுஞ்சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானார்கள்.
ஜேர்மனியின் A2 நெடுஞ்சாலையில், சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இருவர் பலி
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2.48 மணியளவில், Magdeburg என்னுமிடத்துக்கு அருகில் நிகழ்ந்த அந்த விபத்தில், இருவர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

விமானம் தரையில் மோதியதும் தீப்பற்றியுள்ளது. மீட்புக்குழுவினரால் இரண்டு பேருடைய உயிரற்ற உடல்களையே மீட்க முடிந்துள்ளது.
எதனால் இந்த விபத்து நேரிட்டது என்பது தெரியவராத நிலையில், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
விபத்து நிகழ்ந்த A2 நெடுஞ்சாலை, பெர்லினையும் North Rhine-Westphalia மாகாணத்தையும் இணைக்கும் முக்கிய பாதை என்பது குறிப்பிடத்தக்கது.