பிரித்தானியாவை தாக்கிய புயல்கள்: இருவர் பலி, ஒருவர் மாயம்
Man vanishes into sea during Storm Austen and two men killed during Storm Boelo: ஆஸ்டன் புயலின்போது கடலில் ஒருவர் மாயமாக, பூலோ புயலின்போது இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.
பிரித்தானியாவை வெள்ளிக்கிழமையன்று ஆஸ்டன் என பெயரிடப்பட்ட புயல் தாக்கிய நிலையில், அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், பூலோ என பெயரிடப்பட்ட புயல் ஒன்று தாக்கியது.
ஒருவர் மாயம், இருவர் பலி
இந்நிலையில், ஆஸ்டன் புயலின்போது இங்கிலாந்திலுள்ள டெவன் என்னுமிடத்தில் ஒருவர் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதியம் அவர் தான் தங்கியிருந்த ஹொட்டலிலிருந்து வெளியேறி கடற்கரைக்குச் சென்ற நிலையில், அதற்குப் பின் அவரைக் காணவில்லை!
கடலோரக்காவல் படை, தொண்டு நிறுவனங்கள், பொலிசார் என இணைந்து ஏராளமானோர் ஒன்பது மணி நேரமாக அவரைத் தேடிய நிலையில், அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஆஸ்டன் புயலைத் தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரித்தானியாவை தாக்கிய பூலோ புயலும் இரண்டு பேரை பலிவாங்கிவிட்டது.
லண்டனில் 20 வயது இளைஞர் ஒருவரும், ஸ்கொட்லாந்தில் 60 வயது நபர் ஒருவரும், பூலோ புயலின்போது மரம் விழுந்ததில் பலியாகியுள்ளார்கள்.
மேலும், பூலோ புயலால் மின்தடை ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், மேலும் மழையும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை, காற்று மற்றும் பெருவெள்ளம் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.