கனடாவில் இனி இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்! வெளியான முக்கிய தகவல்
கனடா நாடாளுமன்ற எம்.பி.க்கள் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா என்கின்ற கொடிய நோயிடம் இருந்து பாதுக்காப்பாக இருக்க தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இருப்பினும் சில மக்கள் தடுப்பூசி மேல் உள்ள பயத்தினால் அதனை செலுத்தி கொள்ள மிகுந்த தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் உலக நாடுகள் தடுப்பூசியின் நன்மைகள் குறித்து மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் சில நாடுகளில் மக்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று கூறியுள்ளனர்.
அந்த வகையில் கனடாவில் கொரோனா தடுப்பூசியை நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசி குறிப்பாக 2 டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள் மட்டுமே அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.