பிரித்தானியா செல்லும் இந்தியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்களுக்கு பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்ததையடுத்து கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது பிரிட்டன் அரசு கோவேக்சின் செலுத்திக்கொண்ட இந்தியர்களை தங்களது நாட்டிற்கு எந்தவித கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.
2 டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயண கட்டுபாடுகள் இருக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 22 ஆம் திகதி முதல் 2 டோஸ் கோவேக்சின் செலுத்தியவர்கள் பிரிட்டன் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது