ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்
ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் காணப்பட்டதாக ஜேர்மன் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் இரண்டு ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்
ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு உருவானது.
ஜேர்மன் ராணுவ தளம் ஒன்றின் அருகே மீண்டும் ட்ரோன்கள்
இந்நிலையில், வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Mechernich நகரில் அமைந்துள்ள ராணுவத் தளத்தின் மீது வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் இரண்டு ட்ரோன்கள் பறப்பதை அந்த தளத்தின் பாதுகாப்பு மையம் கண்டறிந்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ராணுவ பொலிசார் விசாரணை ஒன்றை மேற்கொண்ட நிலையில், பின்னர் அந்த வழக்கை Euskirchen நகர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், அந்த ராணுவ தளத்தின் மீது ஆறு ட்ரோன்கள் பறந்ததாக உள்ளுர் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |