பிரித்தானியாவில் வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 சடலங்கள்: பொலிஸார் தீவிர விசாரணை
பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமாக உயிரிழந்த ஆண் மற்றும் பெண்
பிரித்தானியாவில் கேம்பிரிட்ஜ்ஷயருக்கு(Cambridgeshire) உட்பட்ட மார்ச்(March) நகரின் நார்வுட் சாலையில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை பிற்பகல் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கவலையை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அண்டை வீட்டுக்காரர்கள் வழங்கிய தகவல்படி, உயிரிழந்த இருவரும் தாய் மற்றும் மகன் என சந்தேகிக்கப்படுகிறது. அழைப்பு பதிலளிக்கும் விதமாக கேம்பிரிட்ஜ்ஷயர் பொலிஸார் பிற்பகல் 1:47 மணிக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்கு விரைந்தனர்.
இதையடுத்து உயிரிழந்த நிலையில் கிடந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவரின் உடல்களையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் பொலிஸார்
பொலிஸ் செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி கூறுகையில், அழைப்பு பதிலளித்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர், அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த இந்த மரணங்கள் விளக்கமளிக்க முடியாதவை என கருதப்படுகிறது, மேலும் விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன என தெரிவித்தார்.
சிறிய சந்தை நகரமான மார்ச் சுமார் 22,000 மக்கள் தொகையுடன் கேம்பிரிட்ஜ்ஷயரின் ஐல் ஆஃப் எலி(Isle of Ely) பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |