சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது விபத்துக்குள்ளான இரண்டு ஜெட் விமானங்கள்: விமானிகள் நிலை என்ன?
பிரான்சில் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி ஒத்திகையின்போது இரண்டு ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.
விபத்துக்குள்ளான இரண்டு ஜெட் விமானங்கள்
நேற்று செவ்வாயன்று, பிரான்ஸ் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், ஆறு விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதையும், அவை கீழிறங்கும்போது, இரண்டு விமானங்கள் மோதி கீழே விழுவதையும் காணமுடிகிறது.
Watch MOMENT French jets collide during training session
— RT (@RT_com) March 25, 2025
Pilots and passenger ‘found unconscious’ pic.twitter.com/SR49r6ymUX
ஒரு விமானம், தானியங்கள் சேமித்துவைக்கும் கிடங்கு ஒன்றின் மீது மோதி தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தில், விமானம் கீழ் நோக்கிப் பாயும்போதே இரண்டு விமானிகளும், விமானத்தில் பயணித்த ஒரு நபரும் பாராசூட் மூலம் குதித்துவிட்டதால் உயிர் தப்பியிருக்கிறார்கள்.
என்றாலும், அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இந்த ஒத்திகையில் பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்கள், ரஷ்ய ஊடுருவலுக்குப்பின் உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |