எல்லை கடந்து மற்றொரு நாட்டுக்குள் நுழைந்த பிரான்ஸ் குடிமக்கள் இருவர் சுட்டுக்கொலை
மொராக்கோ மற்றும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற ஒருவரும், பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரும், ஜெட் ஸ்கீ வாகனத்தில் அல்ஜீரியா நாட்டுக்குள் நுழையும்போது அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அல்ஜீரியா கூறுவதென்ன?
கடந்த செவ்வாயன்று, ஐந்து பேர் ஜெட் ஸ்கீ வகை படகுகளில் அல்ஜீரியா நாட்டின் கடல் எல்லை அருகே பயணித்துள்ளார்கள். அவர்கள் மொராக்கோ பகுதியிலிருந்து அல்ஜீரிய கடல் எல்லைக்குள் நுழையவும், அல்ஜீரிய எல்லை பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி சுட்டுள்ளார்கள்.
The Guardian
அதில், Bilal (29) என்பவரும், Abdelali Mchiouer (40) என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், பலமுறை அவர்களை எச்சரிப்பதற்காக தாங்கள் வானத்தை நோக்கி சுட்டும், அதையும் மீறி அவர்கள் எல்லைக்குள் நுழைந்ததாலேயே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவரின் சகோதரர் கூறும் முரண்பட்ட தகவல்
ஆனால், அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதற்கு மாறாக, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான Bilalஇன் தம்பியான Mohamed Kissi, ஜெட் ஸ்கீ படகுகளில் பயணித்தவர்களில் தானும் ஒருவன் என்றும், அல்ஜீரிய எல்லை பாதுகாப்புப்படையினர் எச்சரிக்கை விடுப்பதற்காக வானத்தை நோக்கி சுடவில்லை என்றும், நேரடியாக தங்களை நோக்கியே சுட்டதாகவும், அவர்கள் சுட்டதில் தன் சகோதாரராகிய Bilal மற்றும் Abdelali ஆகியோர் உயிரிழந்ததாகவும், தான் தப்பிவந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதே கூட்டத்தைச் சேர்ந்த Smail Snabi என்பவரை அல்ஜீரிய அதிகாரிகள் பிடித்துச் சென்றதாகவும் Kissi தெரிவித்துள்ளார்.
மொராக்கோவுக்கும் அல்ஜீரியாவுக்குமிடையிலான தூதரக உறவில் விரிசல் காணப்படுகிறது. அத்துடன், அல்ஜீரியாவுக்கும் மொராக்கோவுக்குமிடையிலான எல்லையும் 1994ஆம் ஆண்டே மூடப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |