அரசு பள்ளியில் சேர்ந்தால் வெள்ளி நாணயம் பரிசு- வெளியான அறிவிப்பு
பொதுவாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வள்ளுவர் நகரவை தொடக்கப் பள்ளியில் தற்போது அங்கன்வாடி மையத்துடன் சேர்த்து சுமார் 400 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் 11 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக பேபி எஸ்தர் செயல்பட்டு வருகிறார்.
வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி நிர்வாகம் புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் வகுப்பில் முதலில் சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு தலா 2 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
மேலும், இதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |