அடுத்தடுத்து மயங்கிச் சரிந்த பிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள்
Two guards collapsed beside French President Emmanuel Macron as he was welcoming the Slovak president: ஸ்லோவேக் குடியரசின் ஜனாதிபதி பிரான்ஸ் வந்துள்ள நிலையில், அவரை வரவேற்கும் நேரத்தில் இரண்டு பாதுகாவலர்கள் அடுத்தடுத்து மயங்கிச் சரிந்தார்கள்.
முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பங்கேற்றிருந்த நேரத்தில், இரண்டு பாதுகாவலர்கள் அடுத்தடுத்து மயங்கிச் சரிந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அடுத்தடுத்து மயங்கிச் சரிந்த பாதுகாவலர்கள்
ஸ்லோவேக் குடியரசின் ஜனாதிபதி பிரான்ஸ் வந்துள்ள நிலையில், அவரை வரவேற்பதற்காக நேற்று எலிசி மாளிகையின் வாசலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் காத்திருந்தார்.

அப்போது, அவர் அருகே நின்றுகொண்டிருந்த பாதுகாவலர் ஒருவர் திடீரென நிலைகுலைந்து சரிந்தார்.
மேக்ரானும் மற்ற பாதுகாவலர்களும் அவரிடம் விரைய, அதைத் தொடர்ந்து, பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக தூக்கிச் சென்றுள்ளார்கள்.
A member of the Republican Guard collapsed during an official reception for Slovak President Peter Pellegrini at the Élysée Palace in Paris on Wednesday evening. French President Emmanuel Macron appeared surprised by the incident as he stood ready to welcome his guest, ahead of bilateral talks between the two leaders.
— Forbes Middle East (@Forbes_MENA_) November 12, 2026
சில விநாடிகளுக்குள், மறுபக்கம் நின்ற மற்றொரு பாதுகாவலர் நிலைகுலைந்து சரிந்துள்ளார்.
சரியாக அந்த நேரத்தில் ஸ்லோவேக் குடியரசின் ஜனாதிபதி Peter Pellegrini வந்து சேர, மேக்ரான் அவரை வரவேற்று அழைத்துச் சென்றுள்ளார்.
இப்படி முக்கியமான நேரத்தில் இரண்டு பாதுகாவலர்கள் அடுத்தடுத்து மயங்கிச் சரிந்த நிலையில், அது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவருகின்றன. மக்களும் அது குறித்து பலவகையான கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள்.
எதனால் அந்த பாதுகாவலர்கள் மயங்கிச் சரிந்தார்கள், இப்போது அவர்கள் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.