சுவிஸ் தங்க நாணயம் என நம்பி வாங்கிய இந்திய வியாபாரி: பின்னர் தெரியவந்த உண்மை
இந்திய வியாபாரி ஒருவரிடம், சுவிஸ் தங்க நாணயம் என்று கூறி சில நாணயங்களை விற்றுள்ளார்கள் இருவர்.
ஆடம்பரமான பெட்டியில் வைக்கப்பட்ட அந்த நாணயங்கள் கண்ணைப் பறிக்க, ஆசையுடன் அவற்றை வாங்கிய வியாபாரிக்கு பின்னர்தான் தெரிந்தது அவை போலி நாணயங்கள் என்பது.
சுவிஸ் தங்க நாணயம் என நம்பி...
Valcambi என்பது தங்கம் மற்றும் நவரத்தினங்கள் விற்பனை செய்யும் பிரபல சுவிஸ் நிறுவனம் ஆகும்.
இந்தியாவிலுள்ள மும்பையில் Soni Ladhubhai & Son என்னும் நகை நிறுவனத்தை நடத்திவருபவர் நரேந்திர சோனி (48).
சமீபத்தில் சோனியை அணுகிய அப்துல் மூஸா (51) மற்றும் பமேஷ் ஹேமாவத் (59) என்னும் இருவர் தங்களிடம் Valcambi நிறுவனத்தின் 100 கிராம் எடையுள்ள 25 தங்க நாணயங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
நேர்த்தியாக ஆடம்பர பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த தங்க நாணயங்கள் கண்ணைப் பறிக்க, அவற்றிற்கு 2.30 கோடி பணம் கொடுத்து வாங்கியுள்ளார் சோனி.
பின்னர் தனது நிறுவனத்தில் வைத்து அவற்றில் சுத்தத்தன்மையை சோதிக்க, அவை போலி நாணயங்கள் என்பது சோனிக்குத் தெரியவந்துள்ளது.
சோனி அளித்த புகாரின்பேரில் பொலிசார் அப்துல் மற்றும் பமேஷை கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.
தொடர்ச்சியாக இத்தகைய மோசடிகள் நடப்பது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையிலும், நகை வியாபாரிகள் இப்படி மோசடியாளர்களிடம் ஏமாறும் சம்பவங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |