அவுஸ்திரேலியாவில் நடுவானில் மோதிக் கொண்ட 2 ஹெலிகாப்டர்கள்: புகைப்படங்கள்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள “சீ வேர்ல்ட் தீம் பார்க்” அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மோதி விபத்து
குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள “சீ வேர்ல்ட் தீம் பார்க்” வெளியே உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
EPA
கோடை பள்ளி விடுமுறையை கழிப்பதற்காக பூங்காவில் பல்வேறு குடும்பங்கள் குழுமியிருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிவரும் அறிக்கைகள்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை 13 நோயாளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
ATSB தலைமை ஆணையர் Angus Mitchell வழங்கிய தகவலில், என்ன நடந்தது என்பதை ஆராய புலனாய்வாளர்கள் விரைவில் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
EPA
மேலும் விபத்தில் சிக்கிய இரண்டு ஹெலிகாப்டர்களில் ஒன்று சீ வேர்ல்ட் லோகோவை கொண்டிருந்ததாகவும், மோதலுக்குப் பிறகு அதனால் தரையிறங்க முடிந்தது என்றும் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
AP