இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவர்கள் இருவரை பலிவாங்கிய விபத்து: சாரதிக்கு சிறை
இங்கிலாந்தில், விபத்தொன்றில் இந்திய வம்சாவளிச் சிறுவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு சிறுவர்களை பலிவாங்கிய விபத்து
2019ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இந்திய வம்சாவளியினரான ஆரத்தி (Arathi Nahar)யும் அவரது மகன்களான சஞ்சய் (Sanjay, 10) மற்றும் 23 மாதக் குழந்தையான பவன்வீர் ஆகிய மூவரும் (Pawanveer Singh) காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அதிவேகமாக வந்த மற்றொரு கார் அவர்கள் கார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சஞ்சயும் பன்வீரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவர்களுடைய தாயாகிய ஆரத்தி படுகாயமடைந்தார்.
FAMILY
அவர்கள் கார் மீது மோதிய நபர் காரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். பொலிசாரின் விசாரணையில் அந்த கார் மொஹம்மது சுலைமான் கான் (28) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவர, பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.
பொய் சொல்லி தப்ப முயன்ற சாரதி
ஆனால், தான் காரை ஓட்டவில்லை என மறுத்த கான், தனது கார் திருட்டுப் போய்விட்டதாக பொய் சொல்லி ஏமாற்ற முயன்றார்.
விசாரணையில் உண்மை வெளியே வந்ததுடன், கான், மணிக்கு 40 மைல் வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இடத்தில், மணிக்கு 92 மைல் வேகத்தில் கார் ஓட்டிவந்ததும் தெரியவந்தது.
WMP
சிறைத்தண்டனை
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, கானுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் விடுதலையான பிறகும் ஏழு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தன் மகன்கள் கொல்லப்பட்ட அன்றே தானும் மரணித்துவிட்டதாக கூறும் ஆரத்தி, ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையும், பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்தநாளும் தனக்கு வேதனையை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |