சாலையில் கார் பந்தயம்; பிரித்தானியாவில் 2 இந்திய வம்சாவளியினருக்கு 16 ஆண்டு சிறை
2 indian origin men get jailed for dangerous car race in uk road: சாலையில் கார் பந்தயம் நடத்தி இருவரின் உயிரிழப்பிற்கு காரணமான 2 இந்திய வம்சாவளியினருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு சிறை
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று காலை சுமார் 8.30 மணிக்கு ஸ்காட் ஹால் சாலை வழியாக 27 வயதான ஜஸ்டினா ஹல்போஜ் (Justyna Hulboj) தனது 4 வயது மகள் லீனா செப்சோரை மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இந்திய வம்சாவளியான ஹர்தீப் பச்சு(Hardeep Bhachu) மணிக்கு 89 மைல் வேகத்தில் ஓட்டி வந்த ஆடி TT RS கார், நடந்த சென்ற இருவரின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

விசாரணையில் ஹர்தீப் பச்சு தனக்கு முன்பின் தெரியாத ஒருவருடன் சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
லீட்ஸ் நகரின் கிராண்ட் ரோவைச் சேர்ந்த பச்சு, விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தனக்கு முன்பின் தெரியாத ஜஸ்கமல் ரியாத் (Jasskamal Riyat) என்பவருடன் ஒரு சிக்னலில் அருகருகே காத்திருந்தபோது, தங்களது கார்களின் ஜன்னல்கள் வழியாக தங்களது கார்களின் ஆற்றலுக்காக ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினர். முதலில் ரியாத் வேகத்தை அதிகரித்தார். அவரைத் தொடர்ந்து வந்த பச்சு, மணிக்கு 40 மைல் வேக வரம்பு கொண்ட சாலையில் கிட்டத்தட்ட 90 மைல் வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
29 வயதான பச்சு அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
லீட்ஸ் நகரின் பக்ஸ்டோன் அவென்யூவைச் சேர்ந்த 37 வயதான ரியாத், பந்தயத்தில் ஈடுபட்டதை மறுத்தபோதிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த விசாரணையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
நேற்று, லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில், ரியாத்துக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பச்சுவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.