பிரித்தானியாவில் கார் விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் பலி, ஐந்து பேர் காயம்
பிரித்தானியாவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள், ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
கார் விபத்தில் இந்திய மாணவர்கள் பலி
திங்கட்கிழமையன்று, இங்கிலாந்திலுள்ள எசெக்ஸில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு கார்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதிய அந்த விபத்தில், ஒரு காரில் பயணித்த Chaitanya Tarre (23) மற்றும் Rishiteja Rapolu (21) என்னும் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
உயர் கல்வி கற்பதற்காக எட்டு மாதங்களுக்கு முன்புதான் பிரித்தானியா வந்த Chaitanya சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, Rishiteja மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த மேலும் ஐந்து மாணவர்கள் லண்டன் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் Sai Goutham Ravulla (30) என்பவருக்குவென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது, Nuthan Thatikayala என்பவருக்கு ஒரு பக்கம் கை கால் செயலிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த Yuva Teja Reddy Gurram, Vamshi Golla மற்றும் Venkata Sumanth Pentyala ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கார்களை ஓட்டிய Gopichand Batamekala மற்றும் Manohar Sabbani ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிசார் அவர்களை காவலில் அடைத்துள்ளார்கள்.
எதனால் விபத்து நடந்தது என்பதை அறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் கல்வி கற்கச் சென்ற தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் அறிந்து இந்தியாவின் ஹைதராபாதில் அவர்களுடைய பெற்றோர் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |