கனடாவில் கார் விபத்தில் 2 இந்திய இளைஞர்கள் பலி; மற்றோரு இந்திய இளைஞர் கைது
கனடாவில் நான்கு இந்திய இளைஞர்கள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனடாவின் West Vancouver பகுதியில் உள்ள பிரதான சாலையில் இந்த விபத்து நடந்தது.
விபத்துக்கு உள்ளான காரில், இந்திய மாநிலம் பஞ்சாபை சேர்ந்த 4 இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாணவர்களுக்கான படிப்பு விசாவில் கனடாவுக்கு வந்தவர்கள்.
நால்வரும் கடந்த வியாழக்கிழமை அதிகாலை காரில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே, பஞ்சாப் பர்காரி கிராமத்தைச் சேர்ந்த குல்பிர் சிங் (20) மற்றும் பாரித்கோட் டவுனைச் சேர்ந்த சிதாட் கர்க் (19) ஆகிய 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றோரு இளைஞர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரை ஒட்டிச் சென்ற மற்றோரு 22 வயது இளைஞரை, விபத்தை ஏற்படுத்தி 2 பேரை கொலை செய்த குற்றத்திற்காகவும், மற்றவர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் குற்றத்திற்காகவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோவிட்-19 காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் குடும்பங்கள் உடல்களை மீட்டுத் தருமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளன.
அதனைத் தொடர்ந்து, உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு, உடல்கள் எம்பாமிங் செய்து மற்றும் ஹெர்மீடிக் சீல் வைக்கும் வேலைகள் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.